வெள்ளி, 12 நவம்பர், 2010

viruppudan velai seiveer

விருப்புடன் செய்யும் எந்த வேலையும் சிரமமாக இருப்பதில்லை .வெறுப்புடன் செய்யும் எந்த வேலையும் சுலபமாக இருப்பதில்லை .ஆகவே நாம்  செய்யும் எந்த ஒரு சிறுவேலை ஆனாலும் நமது முழு மனதுடன் செய்யும் போதுதான் அந்த வேலையானது முழுமையடைகிறது.ஆனால் நமது அலுவலகத்தில் நமது அதிகாரி அலுவலக சம்பந்தப்பட்ட ஏதேனும் குறிப்பு எடுத்துக்கொடுக்கும் படி நம்மிடம் சொல்லிருப்பார் .நாம் இவருக்கு என்ன எப்பப்பார்த்தாலும் சும்மா அதை எடு இதை எடு என்று சும்மா நம்மை வேலை வாங்குகிறார் என்று தோன்றினால்  நாம் அவர் சொன்ன குறிப்பை  எடுத்துக்கொடுப்பதட்குள் ஒருவழி ஆகிவிடும்.அதுமட்டுமல்லாமல்  நாம் எடுத்துக்கொடுத்த குறிப்பில்  சில முக்கியமானதை சேர்க்க மறந்திருப்போம் .அதன்காரணமாக அந்த அதிகாரியின் மனதில் நம்மைப்பற்றி மோசமான அபிப்ப்ரயம்தான் வரும் .அதையே  நமது அதிகாரி நம் அலுவலக சம்மந்தப்பட்ட  தகவல்களைத்தானே கேட்கிறார் .அதை எடுத்துக்கொடுப்பது நமது வேலைதானே என்று நினைத்து விருப்புடன் செய்து பாருங்கள் .அதே வேலை சுலபமாக முடிவதுடன்  அந்த குறிப்பு சம்மந்தப்பட்ட எதுவும் விடுபடாமல் உங்களது அதிகாரி எதிபர்த்ததை விட சிறப்பாக செய்து முடித்திருப்பீர்கள் .அந்த அதிகாரிக்கு உங்கள்மேல் ஒருநல்ல  அபிப்பிராயம் வரும்.சினிமா துறையை எடுத்துக்கொண்டால் எத்தனைபேர் முன்னுக்குவந்து இருக்கிறார்கள் .எடுத்துக்கொண்ட வேலை அது எந்த வேலையானாலும் சரி .அதில் முழு ஈடுபாடு காட்டுபவனே வெற்றிபெறுகிறான் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக