வியாழன், 18 நவம்பர், 2010

  •  மைசூர்பா செய்ய எளிய முறை                                                       தேவையான பொருட்கள்                                                                                                                                       கடலை    கடலை மாவு   ஒரு  கப்    , சர்க்கரை ஒரு  கப்    சன்பலாவேர் ஆயில் இரண்டு  கப்  நெய் நான்கு  ஸ்பூன்  சால்ட் ஒருசிட்டிகை                                                                                செய்முறை                                                     முதலில் வாணலியை அடுப்பில் வைத்து எடுத்து வைத்துள்ள கடலைமாவை ஒரு ஸ்பூன் நெய் விட்டு லேசாக பச்சை வாசம் போகும் வரை வறுத்து வைத்துக்கொள்ளவும் . பின்னர் வானலியில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரையை போட்டு நான்கு கிளறவேண்டும் .சர்க்கரை கரையும்வரை கிளறிவிட்டு (கொதிக்கவிட வேண்டாம்)பின் அதில் என்னையையும் நெய்யையும் சேர்த்து கிளறவும் .எண்ணெய் கொதிவரும்போது ஏற்கனவே வறுத்து வைத்துள்ள (கட்டி இல்லாமல் சலித்து வைத்துக்கொள்ளவேண்டும்.) கடலைமாவை அதில் போட்டு நான்கு கிளறவேண்டும்.சால்ட் ஒரு சிட்டிகையையும் சேர்த்துக்கொள்ளவும்  .அடுப்பை சிம்மில் வைத்துக்கொள்ளவும் .சிறிது நேரம் கிளறியபின் கடலைமாவு வானலியில் ஒட்டாமல் நன்கு திரண்டு சுற்றிவரும்.சுமார் பத்து அல்லது பதினைந்து நிமிடம் நன்கு கிளறிவிடவும்.பின்னர் ஒரு தட்டில் ஒரு ஸ்பூன் நெய் தடவி அதில் இந்த கலவையை கொட்டி நன்கு ஆறியபின் அதை வேண்டியவாறு சிறுசிறு துண்டுகள் செய்து கொள்ளலாம்..இப்போது சுவையான மைசூர்பா ரெடி. இது மிகவும் சுவையாக இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.இதை செய்து பார்த்துவிட்டு உங்களுடைய அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.               நன்றி

வெள்ளி, 12 நவம்பர், 2010

viruppudan velai seiveer

விருப்புடன் செய்யும் எந்த வேலையும் சிரமமாக இருப்பதில்லை .வெறுப்புடன் செய்யும் எந்த வேலையும் சுலபமாக இருப்பதில்லை .ஆகவே நாம்  செய்யும் எந்த ஒரு சிறுவேலை ஆனாலும் நமது முழு மனதுடன் செய்யும் போதுதான் அந்த வேலையானது முழுமையடைகிறது.ஆனால் நமது அலுவலகத்தில் நமது அதிகாரி அலுவலக சம்பந்தப்பட்ட ஏதேனும் குறிப்பு எடுத்துக்கொடுக்கும் படி நம்மிடம் சொல்லிருப்பார் .நாம் இவருக்கு என்ன எப்பப்பார்த்தாலும் சும்மா அதை எடு இதை எடு என்று சும்மா நம்மை வேலை வாங்குகிறார் என்று தோன்றினால்  நாம் அவர் சொன்ன குறிப்பை  எடுத்துக்கொடுப்பதட்குள் ஒருவழி ஆகிவிடும்.அதுமட்டுமல்லாமல்  நாம் எடுத்துக்கொடுத்த குறிப்பில்  சில முக்கியமானதை சேர்க்க மறந்திருப்போம் .அதன்காரணமாக அந்த அதிகாரியின் மனதில் நம்மைப்பற்றி மோசமான அபிப்ப்ரயம்தான் வரும் .அதையே  நமது அதிகாரி நம் அலுவலக சம்மந்தப்பட்ட  தகவல்களைத்தானே கேட்கிறார் .அதை எடுத்துக்கொடுப்பது நமது வேலைதானே என்று நினைத்து விருப்புடன் செய்து பாருங்கள் .அதே வேலை சுலபமாக முடிவதுடன்  அந்த குறிப்பு சம்மந்தப்பட்ட எதுவும் விடுபடாமல் உங்களது அதிகாரி எதிபர்த்ததை விட சிறப்பாக செய்து முடித்திருப்பீர்கள் .அந்த அதிகாரிக்கு உங்கள்மேல் ஒருநல்ல  அபிப்பிராயம் வரும்.சினிமா துறையை எடுத்துக்கொண்டால் எத்தனைபேர் முன்னுக்குவந்து இருக்கிறார்கள் .எடுத்துக்கொண்ட வேலை அது எந்த வேலையானாலும் சரி .அதில் முழு ஈடுபாடு காட்டுபவனே வெற்றிபெறுகிறான் .

புதன், 10 நவம்பர், 2010

KOVAI KODUNCHEYAL

கடந்த சிலநாட்களுக்கு முன் கோவையில் நடந்த ரஞ்சித்குமார் ஜெயின் என்பவற்றின் இரண்டு குழந்தைகள் டாக்ஸி டிரைவரால் கடத்தப்பட்டு கொலை செய்த சம்பவம்  தமிழ்நாட்டையே உலுக்கி சட்டசபைவரை பேசப்பட்டது. கொலைக்கு காரணமான  மோகன்ராஜ் எனும் நச்சுப்பாம்பை கவை பொலிசார் அன்றே பிடித்தாலும் அதற்குள் குழந்தைகள் கொள்ளப்பட்டு விட்டனர்.குழந்தையின் பெர்த்ரோருக்கு ஆறுதல்  சொல்ல வார்த்தையில்லை.அணைத்து மக்களின் கருத்தும் கொலைகாரனுக்கு மிக கொடுமையான தண்டனை தரவேண்டும் என்பதே.அதற்கு தகுந்தட்போல் கோவை கமிஷனர் கூட ஒரு தனி அதிகாரியை நியமித்து கொலைகாரனுக்கு எவ்வளவு விரைவில் அதிகபட்ச தண்டனை வாங்கிக்கொடுக்க முடியுமோ அவ்வளவு  சீக்கிரம்  வங்கிக்கொடுக்கிறோம் என்று சொல்லியிருந்தார்.இதற்கிடையில் நேற்று என்கௌன்டரில் கொலைகாரன் மோகன்ராஜ் சுட்டுகொள்ளப்பட்டன் இந்த என்கௌண்டரைப்  பொறுத்தவரை கொலைகாரனுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைத்துள்ளது.கொளைகறனைக்  கொன்றதால் இறந்த குழந்திகள் திரும்ப கிடைப்பார்கள என்று சிலர் கேட்கலாம்  ஆனால் இந்த என்கௌன்ட்டர் குழந்தைகளை கடத்தி பணம் பறிக்க நினைப்பவர்களுக்கு ஒருசாவுமணி  என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது .

ENNAIPATRI

எனது நீண்டநாள் கனவு .பத்திரிகையில் எழுத வேண்டும் என்பது அது தற்போது பிளாக்கர் மூலம் நிறைவேறுவதில் பெரியமகிழ்ச்சி.எனது சொந்த ஊர் கோவை .தற்போது எனது மனைவியின் வேலையின் காரணமாக அயர்லாந்தில்  வசித்துகொண்டிருக்கிறோம்.எனது பொழுதுபோக்கு புத்தகங்கள்தான் .தற்போது வலைபதிவு

ENNAIPPATRI ORU ARIMUGAM

எனது கன்னி முயற்சி எதேனும் சிறிசிறு குறைகள் இருந்தால் பெரிய மனது வைத்து மன்னிக்கவும் .